Thursday, 16 November 2023

மகன்றில் களவு 9

அவன் வரவுக்கென்றே நிலையில்

மாட்டப்பட்ட மஞ்சள் வண்ணத் திரைச்சீலை

ஒவ்வொரு முறை அசையும் பொழுதிலும்

அவனது பிம்பம்

போனமுறை அணிந்த வெளிர்நீல வெள்ளைக்கோடு சட்டையுடன்

கடிகார ஊசல் போல

வந்து மறைந்தான்

அவளது கதவு

நல்லூழ் கொண்ட ஓர் அந்திவேளையில் தட்டப்பட்டது

அன்றைக்கு அவன் அணிந்திருந்தது வேறு 

அவளோ அன்றும் முதல் சந்திப்பில் அணிந்த 

அதே ப்ளூபெர்ரி நிற சேலையுடன் இருந்தாள் 

அறைமுழுதும் நிறைந்தது

இருவரின் இனிமை

மஞ்சள் திரைச்சீலை பேறு பெற்றது


-வெண்பா கீதாயன் 

No comments:

Post a Comment

மழை மோகம்

இரவின் சாளரம்  மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன  கந்தர்வ ஸ்பர...