பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை
நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்
நொடியில் பிடுங்கி மேசையில்
வீசினான்
சிதறிய மலர்களின் மணம்
நாணமுற்றன
அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை
அவன் மூச்சுக்காற்று சுவைத்த
நொடிதனில்
- வெண்பா கீதாயன்
பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை
நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்
நொடியில் பிடுங்கி மேசையில்
வீசினான்
சிதறிய மலர்களின் மணம்
நாணமுற்றன
அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை
அவன் மூச்சுக்காற்று சுவைத்த
நொடிதனில்
- வெண்பா கீதாயன்
சேடல் முகிழ் பொழுதது
மோதி விளையாடும் முகில்கள்
சிதறிய நூபுர முத்துப்பரல்கள்
அடர்வன ஓர் வகிடுப் பாதையில்
தேடிட நேரமன்று
என்றோ அவ்வழியே அவன் வரவு
தாள்தனில் உறுத்திய பரல்கள்
கணப்பொழுதில் அவள் உரு
எழுந்து அணைந்தது
வெறி கொண்ட அணங்கென
- வெண்பா கீதாயன்
அதிகாலையா பின்னிரவா என்றறியாத வேளையில்
ஒளிரும் விண்மீன்களுக்கிடையே
ஏதோவொரு விண்மீன்
என் சாளரத்தில் அமர்ந்தது
அதனிடம் பெயர் கேட்க புரண்டு படுத்தேன்
அத்தனை மிளிர்வுடன்
நின்றொளிர்ந்தது
விழிகள் கூசிட
அவன் பெயர் இட்டேன்
இன்னும் நெருக்கத்தில் வந்தமர்ந்தது விண்மீன்
சாளரத் திரையை இழுத்துவிட்டு
கண்களை மூடிக் கொண்டேன்
-வெண்பா கீதாயன்
இரவின் சாளரம் மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன கந்தர்வ ஸ்பர...