ஒரு துளி மதுவினும் பேரினிமை
அவன் மிச்சம் வைத்த தேறல்
குறையற்ற யாழின் நரம்புகள்
அணிச்சரமென கோர்த்திட
ஒளிர்நிலவின் தண்மை
மெதுவாய் கரைந்திட
உரசிய தோள்கள் அறியும்
உண்மை நிலைதனை
அனைத்தும் மாயை
தன்னினிமையே மெய்யென
நகைத்தது தேறலின் கடைத்துளி
யாமமோ கடந்திட மறந்து துயின்றது
அவன்மேல் சரிந்தவள் மெதுவாய் மொழிந்தாள்
துயிலும் இரவுதனை எழுப்பி விடாதேயென்று
- வெண்பா கீதாயன்
அந்த ஸ்பரிசம் கிடைக்கப்பெற்று மெய்மறந்த நிகழ்வினை, இதைவிட கவிதையாக கூறுதல் கடினம்
ReplyDelete