Wednesday, 25 October 2023

மகன்றில் களவு 7

கடிகையின் முள் நகர்வுகளை நோக்கி
தவம் செய்தது தாபம்
நாளும் அல்லும் அவள் இருத்தலை அறியாது
பொறுமையாய் நகர்ந்தன
சிதறிக்கிடந்த மென்முல்லைகள் 
அணிகளற்ற கூந்தல்
கலையாத தொய்யில்
துயில் மறந்த விழிகள்
வரவின் பொருட்டு வாயிலை நோக்கின
அவன் தலையணை சேமித்த வாசனை
தற்போதைக்கு ஆற்றும் குளிகை
இடை நில்லா கலிங்கத்தை
இழுத்து வளைத்திட
அறுபொழுதும் ஓய்ந்து கிடக்கின்றன
அறிவையை அறியாது இருக்கும் அவன் வன்நெஞ்சு காத்திருக்கும் கடிகைக்கேனும்
மோட்சம் அளிக்கட்டும் 

No comments:

Post a Comment

வேனிற்பூக்கள்

நிழற்சாலை நெடுகிலும் செர்ரி மலர்பொழிவுகள் வசந்தகால பிரியத்தின் வரவு நோக்கி  வேனிலின் வெப்பத்தை வெட்கம் அறியுமோ?  பசலையுற்ற தேகம் கண்டு முதற்...