Wednesday, 18 December 2024

பாவை மொழிகள் - 3

வைகறைத் தூறல் நிலம் நனைக்க

உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்

விண்ணுலகிலும் அலருமென 

கந்தர்வன் அளித்ததன் கொடையவை

ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும் 

கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்

துவள்விழியைத் திறந்திடுமின்! 

பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்! 

1 comment:

இரவுக்களிப்பு

திரைச்சீலைகளின் குவிப்புக்கு ஒருபுறம் அவளும் மறுபுறம் அவனும் சந்தித்துக் கொள்ளா விழிகள்  வால்ட்ஸ் நடன இசை துவங்கியது மெய்மறந்து தியானிப்பதைப...