Thursday, 21 September 2023

மகன்றில் களவு 3

சேடல் முகிழ் பொழுதது

மோதி விளையாடும் முகில்கள்

சிதறிய நூபுர முத்துப்பரல்கள் 

அடர்வன ஓர் வகிடுப் பாதையில் 

தேடிட நேரமன்று

என்றோ அவ்வழியே அவன் வரவு

தாள்தனில் உறுத்திய பரல்கள் 

கணப்பொழுதில் அவள் உரு

எழுந்து அணைந்தது 

வெறி கொண்ட அணங்கென 


- வெண்பா கீதாயன் 

1 comment:

பச்சை விழிகள்

அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள்  அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண்  தும்பிகளின் கூடற்களி  மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...